Tamilnadu
2-வது கணவருக்குப் பிறந்த குழந்தை.. ரூ.1.40 லட்சத்துக்கு விற்ற கொடூர தாய் : விசாரணையில் போலிஸார் ஷாக்!
நெல்லை மாவட்டம், கரைச்சுற்று உவரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கச்செல்வி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதையடுத்து தங்கச்செல்விக்கு அர்ஜூன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் இக்குழந்தையை விற்க தங்கச்செல்வி முடிவு செய்துள்ளார். இது பற்றி அறிந்த ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் என்பவர், கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்குக் குழந்தை இல்லை. அவர்களுக்கு விற்றுவிடலாம் என கூறியுள்ளார்.
இதன்படி கேரள தம்பதிக்குத் தங்கச்செல்வி பெற்ற குழந்தையை ரூ.1.40 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து கேரள தம்பதியினர் குழந்தை வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் குழந்தை குறித்து விசாரணை செய்துள்ளனர். இதற்கு அந்த தம்பதியினர், குழந்தையைத் தமிழ்நாட்டிலிருந்து வாங்கி வந்த உண்மையைக் கூறியுள்ளனர்.
உடனே அந்த மருத்துவமனை நிர்வாகம், இது கறித்து கேரள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு இதுகுறித்து அவர்கள் நெல்லை குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும், போலிஸாரும் கேரளா சென்று குழந்தையை மீட்டு தாய் தங்கச்செல்வி, ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன், கேரள தம்பதி உட்பட 4 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!