தமிழ்நாடு

தலைமையாசிரியர் கையில் கிடைத்த தற்கொலை கடிதம்.. பெற்ற மகளுக்கு தந்தையால் நிகழ்ந்த கொடூரம்: பகீர் சம்பவம்!

விருதுநகர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தலைமையாசிரியர் கையில் கிடைத்த தற்கொலை கடிதம்.. பெற்ற மகளுக்கு தந்தையால் நிகழ்ந்த கொடூரம்: பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகரைச் சேர்ந்தவர்கள் தங்கமணி ( 43) தேவி (36) தம்பதியர். தங்கமணி அருகில் உள்ள கடை ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி அருகில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் தனியார் பெண்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். தேவியின் கணவர் தங்கமணி வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

மூத்த மகள் பள்ளி கடந்த ஜனவரி மாதம் பள்ளி செல்லாமல் அன்று வீட்டில் இருந்தபோது பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் கடந்த 3 மாதமாக தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை தாய் மற்றும் தங்கையிடம் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி, வலுக்கட்டாய பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தந்தையின் தொல்லை தாங்கமுடியாமல் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். பள்ளிக்குச் சென்றபோது அந்தக் கடிதம் தவறி விழுந்து அவர் படிக்கும் தலைமை ஆசிரியையின் கைக்கு கிடைத்ததுள்ளது.

தலைமை ஆசிரியர், தாய் தேவியை பள்ளிக்கு அழைத்து சிறுமியிடம் விசாரித்தபோது அழுதுகொண்டே தந்தை செய்த பாலியல் தொந்தரவுகளை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன தாய் தேவி, கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலிஸார் தங்கமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (குறிப்பு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

banner

Related Stories

Related Stories