Tamilnadu
“புத்தகப் பூச்சியாக இல்லாமல் பகுத்தறிவு உணர்வுடன் இருக்க வேண்டும்” : மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
தி.மு.க மாணவரணி சார்வில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாடு சென்னை கலைவானர் அரங்கில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டின் இரண்டாம் அமர்வில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமைச்சர் பொன்முடி, “நாம் இங்கு கூட்டாட்சியுடன் இருக்கிறோம். ஆனால் இங்கு ஆளுநர்கள் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகின்றனர். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக எந்த ஆளுநரும் இல்லைஆட்டுக்கு தாடி எதற்கு என்பது போல மாநிலத்திற்கு எதற்கு ஆளுநர் என்று கேட்கிறோம்.
இருமொழி கொள்கை ஆங்கிலமும், தமிழும் போதும் என்பதுதான் நம் நிலை. கல்லூரியிலும் தமிழ் வழியில் படிக்கலாம் என்ற நிலையைக் கொண்டு வந்தவர் கலைஞர். புத்தகப் புழுவாக மனப்பாடம் செய்து படிக்கும் சூழல் இருக்கிறது அதனால் தான் நம் முதல்வர் நீங்கள் சமூக அறிவை பெற வேண்டும் உங்கள் திறமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மாவட்டம் தோறும் கல்லூரி தோறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடைபெற வேண்டும். அப்போது தான் மாணவர்களின் சிந்தனை மாறும். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் வடமாநிலதில் ஹிந்தி படித்த பலர் இங்கு வந்து பானி பூரி விற்றுகொண்டிருகின்றனர்.
கலைஞர் எல்லா துறையில் சாதித்தார் என்றால் அதற்குக் காரணம் அவர் சிறிய வயதில் வளர்த்துக்கொண்ட கொள்கையும், உணர்வும்தான்.பெண்கள் பலர் படித்து பட்டம் பெற்று வளர்ச்சி பெற காரணமாக இருந்தவர் கலைஞர்.
அதன் தொடர்ச்சியாக அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர 7.5 % இட ஒதுக்கீடு தந்தவர் நம் முதல்வர்.அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தவர் நம் முதல்வர்.பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாடு இது ஆனால் ஒரு நாடு ஒரே மொழி, ஒரே மதம் என்று செயல்படுத்தத் திட்டமிடுகிறார்கள்அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மொழி கொள்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!