Tamilnadu
”தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”.. வெங்கையா நாயுடு பாராட்டு!
சென்னை ‘மெப்ஸ்’ (MEPZ) சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கையாநாயுடு தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.
இந்நிகழ்வில் வெங்கையாநாயுடு பேசியது வருமாறு:- தொழில்துறையில், உற்பத்தித் துறையில்தமிழ்நாடு மிகவும் உயர்ந்து விளங்குவதைநாம் அனைவரும் அறிவோம்.
மோட்டார் வாகன உற்பத்தியில், அவற்றின் உபபொருட்கள் உற்பத்தியில், ஜவுளி உற்பத்தியில், தோல் பொருட்கள் உற்பத்தித் தொழிலில், இலகுரக - கனரக இயந்திரவியலில், பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தியில், மென்பொருள் மற்றும் மின்னணுச் சாதனங்கள் உற்பத்தித் தொழில்களிலெல்லாம்தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழக மக்கள் இயல்பிலேயே அறிவு நுட்பமும் கடும் உழைப்பும் கொண்டவர்கள். தற்போது மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசும் அந்தத் திசைவழியில் முன்னேறிச் செல்ல தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என கூறியுள்ளார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!