Tamilnadu
திடீரென குறுக்கே வந்த மாடு.. நிலைதடுமாறி விழுந்த வாகனம் : மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாக்கியம். இவரது மகன் பாலகுமார். இவர்கள் இருவரும் பர்கூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் வாகனம் செல்லப்பாளையம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. இதனால் பாலகுமார் வாகனத்தில் பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதில் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே தாய் தனபாக்கியம் உயிரிழந்துள்ளார். இவரது மகன் பாலகுமார் படுகாயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பாலகுமாரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!