Tamilnadu
சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்.. நுங்கு வியாபாரம் செய்த தந்தை, மகனுக்கு நேர்ந்த துயரம்!
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் வெங்கடேஷ். இவர்கள் இருவரும் நுங்கு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நுங்குகளை ஏற்றிக் கொண்டு கீழப்பழுவூர் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு நுங்குகளை இறக்கிவைத்துவிட்டு வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்காகத் தந்தையும், மகனும் சாலையை கடந்துள்ளனர்.
அப்போது, தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வந்த பேருந்து ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலை விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
“இது யாருக்கான ஆட்சி? கேடுகெட்ட ஆட்சியை தவெக நடத்திக் கொண்டிருக்கிறது” : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
மாணவிக்கு பாலியல் தொல்லை : இதுதான் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? - DMK IT Wing கேள்வி!
-
வண்டலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. வாய்கிழிய பேசிய முதலமைச்சர் எங்கே? : உதயநிதி கண்டனம்!
-
கழிப்பறைக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி : வண்டலூர் அருகே நடந்த கொடூர சம்பவம்!