Tamilnadu
TV சத்தமாக வைத்து பார்த்த முதியவர் மீது ஆசிட் வீச்சு.. இளைஞரின் கொடூர செயல் - உறவினர்கள் அதிர்ச்சி!
கோவை மாவட்டம், சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். முதியவரான இவர் தனது வீட்டில் சத்தமாக வைத்து டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனால், இவரின் பக்கத்து வீட்டில் இருக்கும் வீரமணி என்ற இளைஞர் முதியவர் வீட்டிற்கு சென்று டி.வி சத்தத்தை குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வீரமணி அங்கிருந்த ஆசிட்டை எடுத்து முதியவர் சம்பத் மீது வீசியுள்ளார். இதில் எரிச்சல் தாங்காமல் சம்பத் அலறியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!