Tamilnadu

A,B,C,D படிக்காததால் UKG படிக்கும் மாணவன் மீது தாக்குதல்.. மூச்சுத்திணறி மயங்கிய சிறுவனுக்கு சிகிச்சை!

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி டெய்சி ராணி தம்பதியர். இவரது மகன் சச்சின் (6). பெரம்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.

சிறுவன் சச்சின் ஆங்கில எழுத்துகளான A,B,C,D சரியாக சொல்லவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை பிரான்சி என்பவர் சிறுவனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்ற நிலையில் பள்ளியில் இருந்த மாணவன் சச்சினை அவரது பெற்றோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் தனது மகனை தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் பெற்றோர் சென்னை திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரித்த சென்னை திரு.வி.க.நகர் போலிஸார் 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு கைதும் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து முறையான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “தாகமா இருக்கு..” - தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவர்.. ஆந்திராவில் விபரீதம்: நடந்தது என்ன ?