Tamilnadu
விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு வந்த சிறுவன்.. மீன் பண்ணை குட்டையில் மூழ்கி பரிதாப பலி
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5). பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கிருத்திக் தொட்டியம் அருகே கீழ காரைக்காடு கிராமத்திலுள்ள இவரது தாய் மாமன் ஹரிஹரன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனின் தாத்தா ரத்தினம் என்பவரின் மீன் பண்ணை பகுதிக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுவன் தவறுதலாக மீன் பண்ணை குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள் அவரி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மீன் பண்ணை குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!