Tamilnadu
மனைவியை கொன்றுவிட்டு நீலிக் கண்ணீர் விட்ட கணவன்.. பெரியப்பாவுடன் சேர்ந்து மகன் செய்த காரியத்தால் பகீர்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சசிகலா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். B.sc., B.Ed., படித்துள்ள சசிகலா, ஆசிரியர் வேலை செல்வதற்கான தகுதித் தேர்வுக்காக, கடந்த சில மாதங்களாக பயிற்சி மையம் சென்று படித்து வந்துள்ளார்.
இப்படி இருக்கையில், சில நாட்களாக சசிக்கலா வீட்டில் நீண்ட நேரம் யாரிடமோ செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவர் மீது கணவர் ஜெயக்குமாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு சசிகலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் மனைவியை கொலை செய்துவிட்டு ஜெயக்குமார் தற்கொலை நாடகமாடியது தெரியவந்துள்ளது.
மனைவி சசிகலாவின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், சம்பவத்தன்று ஜெயக்குமார் மனைவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்ததுபோல் நாடகமாடியுள்ளார்.
இதற்கு ஜெய்குமாரின் பெரியப்பா செல்வராஜ் என்பவரும் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!