Tamilnadu
”இத க்ளிக் பன்னினா பான் கார்டு அப்டேட் ஆகிரும்” - 2 லட்சத்தை இழந்த டாக்டர்; தட்டித்தூக்கிய சைபர் போலிஸ்!
சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கி வரும் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பெறப்படும் புகார்களையும், பதிவு செய்யப்படும் வழக்குகளையும் உரிய முறையில் விசாரித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் தொடர்புடைய வெளிமாநில சைபர் குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜஸ்தான், பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட தீவிர புலன் விசாரணையில் 6 முக்கிய குற்றவாளிகள் பிடிபட்டிருக்கிறார்கள்.
அதன்படி, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மருத்துவர் தனக்கு பான் எண்ணை அப்டேட் செய்ய சொல்லி வந்த மெசேஜை கிளிக் செய்ததால் 2 லட்ச ரூபாயை இழந்ததாக புகார் தெரிவித்திருக்கிறார்.
அதன் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் மோசடி செய்து பெறப்பட்ட பணத்தை கிரெடிட் கார்டு பேமென்ட்டிற்கு பயன்படுத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த அபிஷேக் ஜெயின் (21) என்ற இளைஞன் கடந்த மார்ச் 28ம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதேபோல, டி.எம்.டி கம்பி வாங்குவதாக இருந்த சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவரிடம் இருந்து 7 லட்ச ரூபாயை ஏமாற்றிய பீகாரைச் சேர்ந்த விஷாய் குமார் (32), சாம்பு குமார் (25) ஆகியர் மார்ச் 29ம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதனையடுத்து, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த நபரிடம் ஆன்லைன் ட்ரேடிங்கில் முதலீடு செய்யச் சொல்லி 70 லட்சத்தை ஏமாற்றியதில் குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த ஆமிர் அசப் பிஹமாணி (23), பருக் ரசாக் நவிவாலா (34), பருக் இங்காரியா (41) ஆகிய மூவரை ஏப்ரல் 9ம் தேதி தனிப்படை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
தமிழக சைபர் க்ரைம் காவல் துறை பெருகி வரும் சைரம் குற்றங்களை திறம்பட எதிர்கொள்வதோடு வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்து வருகிறது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!