Tamilnadu
சாலை விபத்தில் பிரபல யூடியூபருக்கு நேர்ந்த கொடூரம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்தவர் நெப்போலியன். இவர் சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் தங்கி கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வருகிறார். மேலும் Travel Vlog என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். ஊர் ஊராக பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் எங்கு சென்றாலும் அந்த ஊரின் சிறப்பு அம்சங்களை விளக்கி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை நெப்போலியன் சைக்கிளில் கோடம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் நெப்போலியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் பிரபல யூடியூபர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!