தமிழ்நாடு

2 தலை.. 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - உரிமையாளர் அதிர்ச்சி: ஆர்வமுடன் பார்த்து செல்லும் கிராமமக்கள்!

இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் கன்று குட்டி ஒன்று பிறந்துள்ளது நாகர்கோவிலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 தலை.. 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - உரிமையாளர் அதிர்ச்சி: ஆர்வமுடன் பார்த்து செல்லும் கிராமமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம், கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரம். இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதியினர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்களிடம் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.

இந்நிலையில் இவர்கள் வளர்த்து வரும் மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. இந்த கன்று குட்டியப் பார்த்து தம்பதியினர் ஆச்சரியடைந்துள்ளனர். இதற்கு காரணம் இரண்டு தலைகள் ஒட்டிய நிலையல் 4 கண்களுடன் கன்று குட்டி இருந்ததுதான்.

இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் ஒவ்வொருவராக வந்து புதிதாக பிறந்த கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்த்து சென்று வருகின்றனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் கன்று குட்டி இப்படி பிறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories