Tamilnadu
காதலியை அரிவாளால் வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்த காதலன்: உறவுக்கு இணங்க மறுத்ததால் வெறிச்செயல்!
ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை அரிவாளால் வெட்டிய காதலன். விசாரணைக்கு பயந்து ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த பாகசாலை காலனியை சேர்ந்தவர் ஏசு (40). திருமணம் ஆன இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருக்கும் இவரது வீட்டின் எதிரே வசிக்கும் மறைந்த முருகன் என்பவரின் மனைவி ஜான்சி (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில் ஏசுவிடம் ஜான்சி பேச மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ஜான்சி திருவாலங்காடில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு தனது மாமனாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
அப்போது எல்விபுரம் - பாகசாலை இடையே வழி மறித்த ஏசு தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஜான்சியின் முகம் மற்றும் கைகளில் வெட்டினார். படுகாயம் அடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய ஏசு மணவூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவாலங்காடு போலிஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!