Tamilnadu
சொத்துக்காக அண்ணனையே கொடூரமாக கொன்ற தம்பி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
புதுக்கோட்டை மாவட்டம், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு நான்கு தம்பிகள் மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக இருக்கும் சொத்துகளை பிரிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இதனால் இவரது நான்காவது தம்பி சொத்துக்களை பிரித்து கொடுக்கும்படி அண்ணன் பழனிசாமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் சொத்துகளைப் பிரித்துக் கொடுக்கும்படி பழனிசாமியிடம், சிவசாமி கேட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். சண்டை தீவிரமானதால், அண்ணன் என்றும் பாராமல் அவரை கீழே தள்ளி, கழுத்தை காலால் மிதித்துள்ளார் அவரது தம்பி.
இதில் மயக்கமடைந்த பழனிசாமியை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சொத்துக்காக சொந்த அண்ணனையே தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!