Tamilnadu
பிரியாணியில் கறிக்கு பதில் கரப்பான் பூச்சி.. சென்னையில் பிரபல ஹோட்டலை பூட்டி சீல் வைத்த உணவுத் துறையினர்!
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை காரப்பாக்கத்தில் உள்ள புகாரி உணவகத்திற்கு, சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த சேர்ந்த தம்பதிகள் சாப்பிட சென்றனர். அங்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, அதில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு சம்மந்தப்பட்ட தம்பதி புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரி சுகுமார், உணவகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு ஹோட்டல் சமையலறை சுத்தமாக இல்லாததை பார்த்த அதிகாரி கரப்பான் பூச்சிகள் சுற்றித் திரிந்ததையும் பார்த்துள்ளார். மேலும் சுகாதார பராமரிப்பில்லாமல் உணவுத்துறையின் விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் சமையலறையில் குப்பைகளாக இருந்திருக்கிறது.
இதனையடுத்து பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது, சமையல் அறை முழுவதும் அசுத்தமாக இருந்தது ஆகியவற்றை கருத்தில்கொண்டு மூன்று நாட்கள் திறக்க அனுமதி மறுத்து உணவகத்தை மூடினார்.
மேலும் உணவகத்தில் இருந்த சுமார் 8 கிலோ பிரியாணியை கீழே கொட்டி அழித்ததோடு, உணவகத்தில் எழுந்த புகாரை மூன்று நாட்களுக்குள் சரி செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!