Tamilnadu
நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்தாததால் நடந்த விபரீதம்.. உடல் செயலிழந்து பெண் பரிதாப பலி!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாய் ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து மாரியம்மாள் நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்து வந்துள்ளார். மேலும் நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி கூட அவர் செலுத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சில நாட்களாக அவரது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் உடல் பாகங்கள் செயலிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!