Tamilnadu
வளையல் கடை பெண்ணிடம் மாமுல் கேட்டு அடிதடி.. அதிமுக பெண் நிர்வாகிக்கு சிறை; காஞ்சி போலிஸ் அதிரடி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்ட இவர் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சித்ராவின் வளையல் கடையில் வந்து 50 ஆயிரம் ரூபாய் மாமுல் கேட்டுள்ளார் அதிமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி திலகவதி. மாமுல் கொடுக்காவிட்டால் கடையை அகற்றச் சொல்லி விடுவேன் என்றும் திலகவதி சித்ராவிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும் பணம் கொடுக்காததால் அதிமுகவின் மகளிர் அணி நகர இணை செயலாளரான திலகவதி வளையல் கடையை நடத்தி வந்த சித்ராவை தாக்கியிருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட சித்ரா கொடுத்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலிஸார் அதிமுக பெண் நிர்வாகியான திலகவதியை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!