Tamilnadu
காதலுக்கு இடையூறு.. சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). இவரது மனைவி கார்த்திகா (21). இவர்களுக்கு மூன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தெரிவித்தார். ஜெகதீஷ் குழந்தை சரணை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த மார்த்தாண்டம் போலிஸார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசொதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகமடைந்து போலிஸா குழந்தையின் பெற்றோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாய் கார்த்திகாவின் செல்போனிற்கு வந்த அழைப்புகள் அழிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலிஸார் நடத்திய விசாரணையில் அந்த செல்போனிற்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பதும், காப்பிக்காடு - மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில்ராஜ் என்பவருடன் கார்த்திகா அதிகநேரம் பேசியிருப்பதும் தெரியவந்தது. சுனில்ராஜ் மற்றும் கார்திகாவிடம் போலிஸார் நடத்திய தொடர் விசாரணையில் திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும் அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
கார்த்திகா வாக்குமூலத்தில் கோவில் திருவிழா ஒன்றில் சுனில்ராஜை பார்த்து காதலில் மூழ்கியதாகவும், இரண்டு குழந்தைகளை கொன்றால் அவன் ஏற்றுகொள்வான் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கணவனிடம் கூறி விஷ பொடியை வாங்கி வரச் செய்திருக்கிறார்.
அந்த விஷப்பொடியை குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்புமாவில் கலந்து கொடுத்ததில் சரண் இறந்ததகாவும், பெண் குழந்தை உப்புமா குறைவாக சாப்பிட்டதால் தப்பித்து கொண்டது என்றார். அந்த விசயம் தாமதமாக தெரிய வரவே அந்த குழந்தைக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடந்து வருகிறது.
திருமணத்தை மீறிய உறவால் பச்சிளம் குழந்தையின் உயிரை பெற்றத் தாயே பறித்த சம்பவம் குளக்கச்சி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!