Tamilnadu
சொத்து வரி உயர்வு.. அமைச்சர் கே.என்.நேரு சொன்ன விளக்கத்தின் 5 முக்கிய அம்சங்கள்!
ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே தமிழ்நாட்டில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.
ஏழை,எளிய நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 7% வீடுகளுக்கு மட்டுமே 100% முதல் 150%வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கொருளாதார அடிப்படையில் 81.8% மக்களுக்கு சொத்து வரி உயர்வால் பாதிப்பில்லை.1.47% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிகவும் குறைவாகவே உள்ளது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது 300% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
“100 நாளில் 576 குற்றங்கள் ; தரங்கெட்ட த.வெ.க ஆட்சி” : ஐ.பரந்தாமன் கடும் தாக்கு!
-
“எங்களுடைய அரசாக இருந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
“ஆதாரம் இருக்குதா?.. பொய் பேசக்கூடாது” - பேரவையில் தவெக அமைச்சர்களை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“முதல்வர் விஜய்.. ஆட்சியை நடத்துங்கள்.. எதிர்க்கட்சியை கொச்சைப்படுத்தி காலத்தை ஓட்ட வேண்டாம்” - முரசொலி!
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்