Tamilnadu
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 60 முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2019 ஆம் வருடம் சாத்தூர் ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற முதியவர் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று குற்றம்சாட்டப்பட்ட முதியவர் சுந்தர்ராஜூக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி தனசேகரன் ஆயுள் தண்டனை வழங்கியும் மற்றும் ரூபாய் 1000 ரூ அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 10 லட்சம் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!