Tamilnadu
கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம் : ஒரே ஊரைச் சேர்ந்த 8 பேர் பலி - 20 பேர் படுகாயம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய மினி வேன் மூலம் சென்றனர்.
அப்போது வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
சுகந்தா (55), துர்கா (40), பரிமளா (12), பவித்ரா (18), செல்வி (35), மங்கை (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கோயிலுக்கு செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவி 16 வயது ஜெயப்பிரியா என்பவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பலியாகி உள்ளார். மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !