Tamilnadu
நள்ளிரவில் காய்கறி கடையைத் திறந்த விவசாயி.. அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன மக்கள்..!
சூரிய உதயத்தை வைத்தும், சேவல் கூவலை வைத்தும் நேரத்தைக் கணிப்பது இன்றும் கிராமங்களில் வாழும் பெரியவர்களின் வழக்கம். அந்தவகையில் சேவல் கூவியதால் விடியப்போகிறது என நினைத்து நள்ளிரவிலேயே காய்கறி விற்பனையை தொடங்கிய விவசாயியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கிராமத்து விவசாயி ஒருவர் சேவல் கூவியதால், பொழுது விடியப்போவதாக என நினைத்து எழுந்து நள்ளிரவு நேரத்தில் கீரை, காய்கறிகளை விற்பனை செய்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வைரவன் (75). இவர் தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே தினமும் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலைநேரத்தில் தனது தோட்டத்தில் இருந்து கீரை, வாழைத்தண்டு, வாழைக்காய், பிரண்டை, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பறித்து வந்து அடுத்த நாள் வியாபாரத்திற்கு தயார் செய்துள்ளார்.
பின்னர் திருப்பத்தூருக்கு வந்து நள்ளிரவில் அண்ணா சிலை அருகில் ஒரு சாக்குப்பையை விரித்து அவர் விற்பனைக்காக காய்கறிகளை அடுக்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு காய்கறி விற்க வந்திருக்கிறீர்களே என்று கேட்கவே, மணி பார்க்கத் தெரியாது என்றும் சேவல் கூவியதால், பொழுது விடியப்போவதாக நினைத்து எழுந்து வந்தேன் எனக் கூறியுள்ளார்.
விவசாயி சொன்ன பதிலைக் கேட்டுத் திகைத்த அவர்கள், நள்ளிரவிலேயே அவரிடம் கீரை உள்ளிட்ட காய்கறிகளை வாங்கிச் சென்றனர். பின்னர், மாடுகள் தொல்லை தரும் எனப் போலிஸாரின் அறிவுரையை அடுத்து, கடையை எடுத்து வைத்துவிட்டு அதிகாலையில் மீண்டும் விற்பனை செய்யத் தொடங்கினார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!