Tamilnadu
வனப்பகுதிக்குச் சென்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி!
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா குடியிருப்பு பகுதியில் கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி 8 வயது சிறுமி வெங்கடேஷ் என்பவனால் வனப்பகுதிக்குள் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இது சம்மந்தமாக கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 2/2018 ன் படி வழக்கு பதியப்பட்டு உதகை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி வெங்கடேசுக்கு பிரிவு 366 ன் படி 10 ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ வழக்கு பிரிவு 6 ன் படி 20 ஆண்டு சிறை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா அதிரடி உத்தரவிட்டார்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!