Tamilnadu
தாயின் ஆண் நண்பரால் 13 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை.. நடந்தது என்ன?
சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து இவருக்கு பிஸ்வாஜி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக 10 வருடங்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிஸ்வாஜி அந்தப் பெண்ணின் 13 வயது மகளை மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனை அறிந்த அவர் தனது பிள்ளைகளைக் அழைத்துக்கொண்டு தனியாக பட்டாபிராம் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வந்த பிஸ்வாஜி அந்த சிறுமியை இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிஸ்வாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
திருக்கோயில் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!
-
சென்னையில் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை... வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் !
-
திருச்செங்கோடு மக்களுக்கு அடித்த ஜாக்பாட்... மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை... புதிய வசதிகள் என்ன ?
-
100 இடங்களில் வாக்காளராக இருந்த பெண்... ஹரியானா தேர்தலில் குளறுபடிகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி !