Tamilnadu
பிடிவாரன்ட் கொடுத்த நீதிமன்றம்.. அவதூறு வழக்கில் டிமிக்கி கொடுத்த மீரா மிதுன் மீண்டும் கைது!
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
அதன் பின்பு இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலிஸார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜரானார்.
ஆனால், விசாரணையின் போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக ஜாமினில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்த போலிஸார் தற்போது விசாரணை நடத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!