Tamilnadu
மனைவிக்குப் பேய் ஓட்டுவதாகக் கூறிய மந்திரவாதி.. ஜன்னலை எட்டிப்பார்த்த கணவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரை பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.
இதனால் அந்த பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளதாக அவரது கணவர் நினைத்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அறிவுறுத்தலின் பேரில் பேய் ஓட்டும் மந்திரவாதியிடம் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அந்த மந்திரவாதி கணவரை வெளியே இருக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவர் எப்படி பேய் ஓட்டுகிறார் என பார்ப்பதற்காக மந்திரவாதி அறையின் ஜன்னலை எட்டிப்பார்த்துள்ளார்.
அந்நேரம் மந்திரவாதி, அவரது மனைவியின் தலையை தனது மடியில் வைத்து ஊதுபத்திகளை மூக்குக்கு அருகே காட்டியதும் அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அறைக்குச் சென்று மனைவியை மீட்டு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, பேய் பிடித்ததாக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மந்திரவாதியைக் கைது செய்தனர்.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!