Tamilnadu
“ஒரே நாளில் நடந்த துயரம்” : தந்தை இறந்த அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு மகனும் பலி.. உறவினர்கள் சோகம்!
திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் நாராயண மூர்த்தி. இவருக்குத் திருமணமாகி ரஞ்சித் பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், வயது முதிர்வு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த வடிவேல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர்கள் மகன் நாராயண மூர்த்திக்குத் தகவல் கொடுத்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதபோது நெஞ்சைப் பிடித்துக் கொண்டே மயங்கி விழுந்தார் நாராயண மூர்த்தி. உடனே அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் தந்தை மற்றும் மகனின் உடலை அருகருகே அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர். தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி? - “தூய்மையான அரசியலுக்கு உகந்துதானா?” - விசிக MP ரவிக்குமார் கேள்வி!
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!