Tamilnadu

“மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை உறுதி” : அதிரடியாக அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீதிமன்றத் தீர்ப்பிற்கு பின் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஊராட்சிகளில் மக்கள் நலப்பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2011ல் அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அரசு மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் வகையில், அவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள் நல பணியாளர்களை நியமித்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அவர்களை வீட்டுக்கு அனுப்பியது.

வேலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியும், அதை எதிர்த்து அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என உறுதியளித்தார்.

Also Read: “ஒரே நாளில் மட்டும் 1.03 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி” : அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!