Tamilnadu
‘என்னடா கறியே இல்ல’.. விருந்துக்குச் சென்ற இடத்தில் தகராறு : நண்பனை குத்தி கொடூரமாக கொலை செய்த நண்பர்கள்!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷேர்கான். இவரது நண்பர் சிவா. இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது, நடைபெற்ற விருந்தில் ஷேர்கான் உணவு பரிமாறியுள்ளார். அப்போது நண்பன் சிவாவுக்குக் கறித் துண்டுகளைக் குறைவாக வைத்துள்ளார். இதனால் நண்பர்கள் இருவருக்கும் அன்றைய தினமே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவா, ஷேர்கானை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து இது குறித்து சிவா அருகில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று இரவு சிவா வீட்டிற்கு வந்த ஷேர்கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர், பிரச்சனையைப் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறி அவரை வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர் காட்டுப்பகுதிக்குச் சென்ற இவர்கள், தாங்கள் மறைத்து எடுத்து வந்த கத்தியை எடுத்து சிவாவைச் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று ஊருக்கு வெளியே குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.
இதையடுத்து வெளியே சென்ற தனது மகன் காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் நடத்திய விசாரணையில் கறித்துண்டில் ஏற்பட்ட தகராறில் சிவா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷேர்கான் மற்றும் அவரது இரண்டு நண்பர்களையும் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!