Representational image
Tamilnadu
குட்டிகளுடன் காட்டு யானை.. காவலாக நிற்கும் 9 யானைகள் - தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டுள்ள நிலையில் அதே பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகள், தோட்டத் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் வேலைக்கு செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக மூன்று குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தற்போது ரன்னிமேடு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளன.
இந்த காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் உலா வருவதால் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குட்டிகளுடன் 9 யானைகள் இருப்பதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே நேற்று முதல் குட்டியுடன் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. பகல் முழுவதும் ரயில் தண்டவாளத்தில் உலா வருவதால், மலை ரயில் வேகத்தை குறைத்து இயக்குமாறு வனத்துறையினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Also Read
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!