Tamilnadu
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை பட்ஜெட்டில் அறிவித்த தி.மு.க அரசு: சிறு குறு தொழில்துறையினர் வரவேற்பு!
தமிழ்நாடு பட்ஜெட் 2022 தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கின்ற நிலையில், பட்ஜெட்டில் வாசிக்கப்பட்ட தொழில்துறை சார்ந்த அறிவிப்புகள் தொழில்துறையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வரவேற்பதாகவும் சிறு குறு தொழில் அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயமுத்தூரில் நேரடியாகயும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கியிருக்கின்ற நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சரின் அறிவிப்பு சிறந்த நிதி மேலான்மையை காட்டுவதாகவும், மாற்றத்தை நோக்கிய வளர்ச்சிக்கான பட்ஜெட் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
சிறு குறு தொழிலுக்கு 911 கோடி ஒதுக்கியது, ஜெர்மன் டெக்னாலஜி கொண்ட 4.0 நவீன தொழில்நுட்பம் அறிமுகம், ஐ.டி திறன் மேம்பாடு, ஏற்றுமதிக்கான கட்டமைப்பு, தொழில் முதலீட்டு மானியம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நடமாடும் உதவி மையம், கயிறு தொழிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, நீண்ட நாள் கோரிக்கையான தொழில் பூங்கா அமைத்தல் அறிவிப்புகள் சிறு குறு தொழில் மேம்பட உதவுமென தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், வேளாண் துறைக்கான அறிவிப்புகளும், இலவச மின் இணைப்புகளும், சிறு குறு தொழில் மின் மோட்டார் விற்பனை அதிகமாக உதவுமெனவும் தெரிவித்திருக்கின்றனர். சிறு குறு தொழிலை அடுத்த கட்டத்துக்கு இட்டுs செல்கின்ற பட்ஜெட் அறிவுக்கப்பட்டதாகவும் சிறு குறு தொழில் முனைவோர் தெருவித்திருக்கின்ற நிலையில், மானிய கோரிக்கையில் மூலப்பொருட்களின் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
”ஆதாரை ஏற்கத் தடுப்பது எது?” : தலைமை தேர்தல் ஆணையருக்கு 7 கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
செய்தியாளர்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட சீமான் : பொதுக்கூட்டத்தில் நடந்த பரபரப்பு!
-
”திமுகவையும் மாணவர்களையும் என்றைக்குமே பிரிக்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
11 ஆண்டுகள் ஆனபிறகும் வார்த்தைகளில் ‘வடை’ சுடும் மோடி : முரசொலி கடும் தாக்கு!
-
"தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !