Tamilnadu
சாலையில் ரகளை செய்த போதை ஆசாமி.. போலிஸை பார்த்ததும் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு - என்ன நடந்தது?
திண்டிவனம் அருகே சாலையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர், போலிஸாரை கண்டதும் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அடுத்த தென்பசார் அருகே வடமாநில இளைஞர் ஒருவர் சாலையோரம் இருந்த கடைக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலிஸார் அந்த இளைஞரை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது அந்த இளைஞர் போலிஸாருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்து, அவனம்பட்டு எல்லையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்தார்.
பின்னர் கிணற்றில் இருந்து மேலே ஏறி வர மறுத்ததால், மயிலம் போலிஸார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கிணற்றில் தத்தளித்த வடமாநில இளைஞரை கயிறு மூலம் மீட்டனர்.
பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
த.வெ.க அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி : நடந்தது என்ன?
-
ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!