Tamilnadu

இல்லாத நிறுவனத்திற்கு வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கிய கும்பல்: விசாரணையில் வெளிவந்த உண்மை!

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். அதேபோல் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர்கள் இருவரும் தொழில் தொடங்கப் போவதாகக் கூறி பஞ்சாப் வங்கியில் ரூ. 1 கோடி கடன் பெற்றுள்ளனர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டாமல் இருந்துவந்துள்ளனர். இது குறித்து வங்கி நிர்வாகம் அவர்களிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. பின்னர் அவர்களின் ஆவணங்களைப் பரிசோதித்தபோது அவர்கள் போலியாகக் கடன் வாங்கியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் இருவர் மீதும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது நண்பர்களான குபேந்திரன் மற்றும் சதாசிவம் இருவரும் விநாயக டிரேடர்ஸ் என்ற பெயரில் போலியாக ஆவணங்களைத் தயாரித்து வங்கியில் கடன் பெற்றது தெரியவந்தது.

மேலும் இந்த பெயரில் எந்த நிறுவனமும் இலை என்பதும் விசாரணையில் தெரிந்ததை அடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “பிறந்தநாள் பரிசு..” : சந்தேகத்தில் பிரித்துப் பார்த்த சுங்க அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!