Tamilnadu
“பிறந்தநாள் பரிசு..” : சந்தேகத்தில் பிரித்துப் பார்த்த சுங்க அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நெதா்லாந்து நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானத்தில் பிறந்தநாள் பரிசு என்ற பெயரில் ரூ.2 லட்சம் மதிப்புடைய போதை பொருட்களுடன் வந்த 2 பாா்சல்களை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை வெளிநாட்டு தபால் மற்றும் பாா்சல்கள் அஞ்சலகத்திற்கு சரக்கு விமானத்தில் நெதா்லாந்து நாட்டிலிருந்து 2 பாா்சல்கள் வந்திருந்தன. ஒரு பாா்சல் ஆந்திரா மாநிலம் விஜயவாடா முகவரிக்கும், மற்றொரு பாா்சல் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் முகவரிக்கும் வந்திருந்தன.
அந்த அலுவலகத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பாா்சல்களை பரிசோதித்துக் கொண்டிருந்த சுங்க அதிகாரிகளுக்கு அந்த 2 பாா்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அந்த பாா்சல்களில் பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்கத்துறையினா் சந்தேகத்தில் இரு பாா்சல்களையும் பிரித்துப் பாா்த்து சோதித்தனா்.
ஒரு பாா்சலில் விலை உயா்ந்த 32 போதை மாத்திரைகள் இருந்தன. மற்றொரு பாா்சலில் பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா போதைப்பொருள் 419 கிராம் இருந்தது. இரு பாா்சல்களில் இருந்த போதைப்பொருட்களின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.2 லட்சம். இதையடுத்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனா்.
சுங்கத்துறையினரின் தனிப்படையினா், ஹைதராபாத், விஜயவாடா நகரங்களுக்கு விசாரணைக்காக சென்றனா். ஆனால் பாா்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து போலி முகவரியில் வெளிநாட்டிலிருந்து போதை பொருட்களை வரவழைத்த தெலங்கானா, ஆந்திரா ஆசாமிகளை தேடி வருகின்றனா்.
Also Read
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!