Tamilnadu
3ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. முதியவர் மீது பாய்ந்தது போக்சோ : பகீர் சம்பவம் !
திருவாரூர் மாவட்டம், குண்ணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். முதியவரான இவர் அதேபகுதியைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் முதியவர் மீது திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து முதியவர் சண்முகசுந்தரத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை போலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சண்முகசுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவரை சிறையில் அடைத்தனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!