Tamilnadu
“10 மாதங்களில் 8 முத்தான திட்டங்கள்” : மகளிர் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் துணை நிற்கும் தி.மு.கழக அரசு!
பெண்களின் முன்னேற்றத்திற்கு வேண்டிய சட்டங்களை இயற்றி திட்டங்களை நிறைவேற்றி பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளும் பெற்று முன்னேறி அவர்கள் பல பதவிகளை அடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு பெரும் பங்கு ஆற்றியது. பெண் முன்னேற்றத்திற்கு தி.மு.க அரசும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் ஆற்றிய பணிகள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பணிகளாக அமைந்துள்ளன. மகளிர் முன்னேற்றதில் தி.மு.கவின் பங்கு மகத்தானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண் கல்வி, பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்ட தலைவராக உள்ளார். அவர் சென்னை மாநகராட்சியின் மேயராக, தமிழக அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிர் முன்னேற்றம் அடைய பெரும் பங்காற்றினார்.
கல்வி, உயர்பதவி, தொழில் துறை ஆகியவற்றில் பெண்கள் மேன்மை பெறவும், பெண்கள் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு பெறவும், ஏழ்மையில் உள்ள பெண்கள் ஏற்றம் பெறவும் பல திட்டங்களை நிறைவேற்றி பாடுபட்டு வருகிறார்.
அந்தவகையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த தி.மு.கழகம், பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். மே 7ஆம் தேதி அன்று முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்று கையெழுத்திட்ட 5 திட்டங்களில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற முத்தான திட்டத்தால், இதோ இன்று லட்சக்கணக்கான பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து மாதத்திற்கு ஆயிரம் ரூபாயி லிருந்து 1500 ரூபாய் வரை மிச்சப்படுத்தப்படுவதாகவும், எங்கள் குடும்பச் செலவுகளுக்காக பெரிதும் உதவிகரமாக இருப்பதாகவும் பெண்கள் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை புகழ்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், கடந்த 9 மாதங்களில் மகளிருக்காக முதலமைச்சர் அறிவித்த முக்கிய திட்டம் பின்வருமாறு :
பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் நாளொன்றுக்கு 36 லட்சம் பெண்கள் 5.66 கோடி செலவில் பயன்பெறுகிறார்கள்.
8,250 மகளிருக்கு வாழ்வாதாரம் சார்ந்த புதிய வணிக நுண் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மகளிருக்கு அதிகாரத்தை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு.
மகளிரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக 36,321 புதிய சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மகளிர் வாழ்வை வளமாக்க 3,93,580 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 20,479 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட ரூ. 2,674 கோடி கடன் தள்ளுபடி.
பணிபுரியும் மகளிரின் நலம் காக்க 9 மாத பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வண்ணம் 17,192 பெண்களுக்குத் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!