Tamilnadu
'பிரியாணியில கறி இல்ல'.. கடையை சூறையாடிய கும்பல்: கேஷியருக்கு பளார்!
சென்னை பெரியமேடு பகுதியில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அக்கடையில் கேஷியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ரபீக், சலீம், சண்முகம் ஆகிய மூன்று பேர் பார்சலில் பிரியாணி வாங்க கடைக்கு வந்துள்ளனர். மேலும் காசு கொடுத்து பிரியாணி வாங்கியுள்ளனர். அப்போது பார்சல் பிரியாணியில் கறி குறைவாக இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர்.
மேலும் கடையில் இருந்த விக்னேஷ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இது குறித்து விக்னேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து ரபீகை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சலீம் மற்றும் சண்முகத்தை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!