Tamilnadu
பள்ளி மாணவி கடத்தல்.. வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ: நடந்தது என்ன?
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, வாலிபரிடம் இருந்த மாணவியை போலிஸார் மீட்டனர். மேலும் வாலிபர் மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட மாணவியை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!