Tamilnadu

60 ஆண்டுகள்.. 100 படங்கள்.. இடிந்து விழுந்தது காதலர்களுக்கு உதவிய பழைய துறைமுக பாலம் !

புதுச்சேரி கடற்கரை சாலையில் தற்போது காந்தி பீடம் அமைந்துள்ள இடத்தில், பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் துறைமுகம் கட்டப்பட்டது. பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு வம்பாகீரப்பாளையத்தில் இரண்டாவது முறையாக 1956ல் புதிய துறைமுக பாலம் அமைக்கப்பட்டு, ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்று வந்தது. காலப்போக்கில் துறைமுக கையாளும் பணி நிறுத்தப்பட்டதால் இது கடற்கரையை மெருகேற்றும் காட்சிப்பொருளானது.

புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இந்த அழகிய பாலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. பல காதலர்களை சேர்ட்து வைத்ததாகவும் கூறப்படும் இந்த பாலம் கடந்த 1962ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் பழைய துறைமுக பாலம், பலவீனம் அடைந்ததால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனிடையே பாலத்தின் கீழ் பகுதியில் சிமென்ட் மற்றும் இரும்பினால் ஆன துாண்கள் கடல் அலை தாக்குதலால் நாளுக்கு நாள் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வலுவிழந்தது.

அதனால், பாதுகாப்பு கருதி இந்த பாலத்தில் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று நள்ளிரவு கடல் சீற்றம் காரணமாக இந்த பாலத்தின் நடுப்பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. மேலும் மற்ற பகுதிகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

Also Read: 1967 மார்ச் 6 - தி.மு.க முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, பேரறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்ற நாள்!