Tamilnadu
திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை : போலிஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகபிரபு - துர்காதேவி தம்பதி. இந்த புதிய தம்பதி, நேற்றைய தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து அறிந்த போலிஸார் அங்கு சென்று இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த தம்பதிகள் தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், லோகபிரபுவும், துர்காதேவியும் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான் இவர்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதல் ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!