Tamilnadu
காதலியிடம் பேசிய இளைஞருக்கு கத்திக்குத்து.. நண்பர்களுடன் சேர்ந்து காதலன் வெறிச்செயல் - பகீர் சம்பவம் !
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது காதலியுடன் விராலிமலையைச் சேர்ந்த ரசூல் என்ற இளைஞர் பேசி வந்ததாக தெரிந்து, ஆத்திரத்தில் பாலு அவரை மிரட்டியுள்ளார். ஆனாலும் அதனைக் கண்டுகொள்ளாத ரசூல் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனையடுத்து நேற்றைய தினம், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்ற பாலுவின் காதலியுடன் ரசூல் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலு அவரது நண்பர்களுடன் சென்று, ரசூலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாலு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரசூலின் நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் ரசூலை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு ரசூலுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாலு, அவரது தம்பி அருண், நண்பர் சக்தி ஆகியோரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!