Tamilnadu
நடுவீதியில் ரகளை.. போலிஸை கொடூரமாக தாக்கிய அண்ணன் - தம்பி : ‘காப்பு’ மாட்டி சிறையில் தள்ளிய காவல்துறை!
சென்னை ஆவடி அருகே உள்ள கொரட்டூர் சாலை அருகே ஆவடி காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.45 மணியளவில் அவ்வழியாக காரில் வந்த இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டதில், ரகளை செய்தது சியாமளா பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகன்கள் தீபக் ராஜ் (வயது 21) , ஜீவத் ராஜ் (19) எனத் தெரியவந்தது.
முன்னதாக விசாரிக்கச் சென்ற காவலர் ஆகாஷ் பாபுவை அண்ணன் தம்பி இரண்டு பேரும் தாக்கியதாகக் தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து புழல் சிறையில் போலிஸார் அடைத்துள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!