Tamilnadu

“9 மாத ஆட்சியின் சாதனை.. மக்களின் ஏகோபித்த ஒப்புதலோடு தி.மு.க மாபெரும் வெற்றி”: ‘The Hindu’ ஏடு புகழாரம்!

‘மக்களின் ஒப்புதல்’ என்ற தலைப்பிலும், கடந்த 9 மாதங்களில் நடைபெற்ற ஆட்சியின் சாதனைகளைக் கருத்தில் கொண்டு நம்பிக்கையோடு வாக்களித்ததால் தி.மு.க.வின் வெற்றி அமைந்துள்ளது’ என்கிற துணைத் தலைப்பிலும் ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பிப்.24ஆம் தேதி அன்று தலையங்கம் ஒன்றை தீட்டியுள்ளது.

அதன் ஒரு பகுதி வருமாறு:-

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி களில் உள்ள மக்களின் பெருவாரியான ஆதரவின் காரணமாக ஆளும் தி.மு.க. கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டிருந்த போதிலும், கடந்த 9 மாத கால ஆட்சியில் அடைந்த திருப்தியின் காரணமாக மக்கள் அளித்த ஒப்புதலால் இந்த வெற்றி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அ.தி.மு.க.வின் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, திட்டமிட்டு செயல்பட்டு, கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் மேற்கு மண்டலமான கோவை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தி.மு.க. அணிக்கு சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்காததை கருத்தில் கொண்டு வெற்றியை நிலை நாட்டியுள்ளார்.

அந்த மண்டலத்தில் அரசு கண்ணும், கருத்துமாக இருந்ததுடன், கோவை, தருமபுரி அடங்கிய அப்பகுதிகளில் தேர்தல் பணியாற்ற இரண்டு அமைச்சர்களை அனுப்பி இருந்தார். முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சொந்த இடங்களிலேயே - நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றி பெற்றுள்ளது.

புதியதாக தேர்வானவர்கள் திரு.ஸ்டாலின் அவர்களை வெகுவாகக் கவர்ந்ததுடன், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்காக அவர் உரையாற்றிய விதம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பெற்ற கவுன்சிலர்கள் தவறு தலாக நடந்துகொள்ளக் கூடாது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து கூர்ந்து கவனிப்பேன் என்று முன்னாள் மேயரான ஸ்டாலின் எச்சரித்ததுடன், அவ்வாறு தவறுதலாக கவுன்சிலர்கள் நடந்துகொண்டால் அது ஆளும் கட்சியை வெகுவாகப்பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே கவுன்சிலர்களின் நடவடிக்கைகளை அவர் தவறாமல் கண்காணிக்கவேண்டும். இருமுனை அரசியல் தாக்குதல் காரணமாக பா.ஜ.க. குறிப்பிடத்தக்க எந்த ஒரு அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த காலங்களில் திராவிடப்பெருங்கட்சிகள் ஒன்று மாற்றி இன்னொன்று என மாறி மாறி ஆட்சிக்கு வருகிற நிலையானது அவ்வளவாக தெளிவாக இல்லாத நிலையில், பா.ஜ.க. அரசியல் மாற்றாக வருமா என்பது அவ்வளவு எளிதில் முடிவிற்கு வந்துவிட முடியாது. இதற்கிடையே, மக்களின் ஏகோபித்த ஒப்புதலோடு கிடைத்த இந்த வெற்றியானது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என்று திரு.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் மாநில வளர்ச்சியிலும் சாதாரண அரசியலில் திசை திரும் பாமல் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “தேசிய அரசியலில் முக்கியப்பங்காற்றுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ‘TOI’ நாளேடு பாராட்டு!