Tamilnadu
AC-யில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து.. படுக்கை அறையில் எரிந்து கிடந்த 2 வயது குழந்தை : பகீர் சம்பவம் !
சென்னை பல்லாவரம் அடுத்த கவுல்பஜார், யசோதா நகரை சேர்ந்தவர் சரசு (எ) சங்கீதா(25), இவர் இன்று மாலை தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூக் கட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது 2 வயது குழந்தை பிரிஜிதா படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் திடீரென தீப்பிடித்துள்ளது.
தீப்பிடித்த உடன் உள்ளே சென்று குழந்தையை தூக்க தாய் முயன்ற போது தீ மளமளவென பரவியதால், குழந்தையை மீட்க முடியாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறையினரை வரவழைத்து தீயை அணைத்து குழந்தையை பார்த்த போது கட்டிலோடு குழந்தை முற்றிலுமாக எரிந்து இருந்தது.
தகவலறிந்து சென்ற சங்கர் நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் அப்படி.. சிதம்பரத்தில் இப்படி.. பழனிசாமியின் அழைப்புக்கு தக்க பதிலடி கொடுத்த CPI முத்தரசன்!
-
“இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு துணைபோகும் NCERT பாடத்திட்டம்!” : வைகோ கண்டனம்!
-
நாளை (ஜூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்! : முழு விவரம் உள்ளே!
-
மக்களோடு மக்களாக இருக்கும் முதலமைச்சர் என்பதற்கு சான்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்!: முரசொலி புகழாரம்!