Tamilnadu
“இரண்டாவது மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர்” : சென்னையில் ‘பகீர்’ சம்பவம் - காரணம் என்ன?
சென்னை புழல் எம்.ஜி.ஆர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (31). இவர் எலெக்ட்ரிசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலா வயது 25 என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில வருடங்களுக்கு முன்பு மனைவி, பிள்ளைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றார்.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவியாக புழல் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தனர்.
இன்று மதியம் 3 மணி அளவில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வெண்ணிலாவின் கழுத்தை அறுத்துவிட்டு இளங்கோவன் போலிஸில் சரணடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் வெண்ணிலாவை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து போலிஸார் விசாரனையில், வெண்ணிலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதால் அந்த குழந்தைகளை பார்ப்பது சம்பந்தமாக இளங்கோவனிடம் வெண்ணிலா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளங்கோவன் வெண்ணிலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து புழல் போலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
காஞ்சிபுரத்தில் ரூ.215.71 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
“சாதிய அடையாளங்களை நீக்கி வருகிறோம்!” : இந்தியா டுடே மாநாடு 2025-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தேர்தல் வரைக்கும் ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள்..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?