Tamilnadu
“வீடுகளில் ஆண்கள்.. பேருந்தில் பெண்கள் கைவரிசை” : திட்டம்போட்டு கொள்ளையடித்த திருட்டு கும்பல் கைது !
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் குறித்து புகார்கள் காவல் நிலையங்களில் குவிந்துள்ளது. இதையடுத்து போலிஸார் 8 தனிப்படையை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.
இதையடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்த பகுதியிலிருந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலிஸார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 4 பேர் மட்டும் கொள்ளை நடந்த பகுதிகளில் அடிக்கடி சுற்றி வந்தது தெரிந்தது.
பின்னர் போலிஸார் அந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தபோது, இவர்களுடன் மற்ற நான்கு பேர் சேர்ந்து கொண்டுதான் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பூட்டிய வீடு மற்றும் பேருந்துகளில் இந்த கும்பல் தொடர் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.
இவர்கள் கொடுத்த தகவல் படி மற்ற நான்கு பேரையும் போலிஸார் விடுத்தனர். பிறகு இவர்களிடம் விசாரணை செய்தபோது கர்நாடகத்தைச் சேர்ந்த உஷா, சாந்தி, செல்வி, திருப்பத்தூரை சேர்ந்த வள்ளி, திருவண்ணாமலையைச் சேர்ந்த சக்திவேல், ராஜூ, திருவள்ளூரை சேர்ந்த ரசு, ஆம்பூரை சேர்ந்த அமீது ஆகிய 8 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த எட்டு பேரையும் போலிஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!