Tamilnadu
அசைக்கமுடியாத வெற்றியை பதிவு செய்து ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க.. முழு விபரம்!
விருதுநகர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராஜபாளையத்தில் உள்ள 42 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் 33 வார்டுகளில் தி.மு.க-வும், 3 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 3 வார்டுகளில் அ.தி.மு.க-வும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜபாளையம் நகர்மன்ற வரலாற்றில் முதன் முறையாக தி.மு.க நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி திமுக கைப்பற்றுகிறது.
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11-வார்டில் தி.மு.க, 3 வார்டுகளில் சுயேட்சை, ஒரு வார்டில் அ.தி.மு.க உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளனர். ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 12 வார்டுகளை தி.மு.க-வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க-வும், இரண்டு வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. சேத்தூர் பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!