Tamilnadu
“யப்பா.. எத்தன ஒத்த ஓட்டு..” : உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவுக்கு வேட்டு வைத்த வாக்காளர்கள்!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்குக் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியிலிருந்து 268 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியான முடிவுகளிபடி தி.மு.க கூட்டணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை முழுமையாகக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என பேசிவரும் பா.ஜ.கவின் வேட்பாளர்கள் பலர் போட்டியிட்ட இடங்களில் ஒரே ஒரு ஒட்டு மட்டுமே வாங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்துள்ளார். அதேபோல்,செங்கல்பட்டு நகராட்சியின் 9வது வார்டில் போட்டியிட்ட பா.ஜகவின் லோகேஷ் கண்ணன் என்பவரும் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.
இதுதான் கடைசி என்று பார்த்தால், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ராமகிருஷ்ணனுக்கு ஒரு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது.
இவர்களுக்காவது ஒரு ஓட்டாவது கிடைத்தது. விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளருக்கு இதுவும் கிடைக்கவில்லை. இவருக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத நிலையில் பரிதாபமாகத் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டில், மதவெறியை தூண்ட நினைக்கும் பா.ஜ.கவிற்கு தமிழக மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.கவால் தமிழக மண்ணை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!