Tamilnadu

வாக்காளர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்.. தோல்வி பயத்தில் அ.தி.மு.கவினர் அராஜகம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் தோல்வி பயத்தில் அ.தி.மு.கவினர் தி.மு.க ஆதரவாளரான ஆட்டோ டிரைவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.முக.வினர் தோல்வி பயத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தினர். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை நடத்தவில்லை. இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் வடசேரி 12-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் தோல்வி பயத்தில் காலை முதல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அங்கு போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க கும்பல் தி.மு.க ஆதரவாளர் ஜேசுராஜன் வீட்டுக்கு சென்று அவரது மனைவியின் கண் முன்னே அவரை சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கினர்.

இதில் ஆட்டோ டிரைவர் மண்டை உடைந்தது. தி.மு.க ஆதரவாளரான ஆட்டோ டிரைவர் ஜேசுராஜன் வாக்காளர்களை ஆட்டோவில் அழைத்து வந்த ஆத்திரத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலிஸார் காயமடைந்த ஆட்டோ டிரைவரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகாயமடைந்த ஜேசுராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: பூத் ஏஜெண்ட் தவறு செய்தது தெரியாமல் பொய் குற்றச்சாட்டு சுமத்திய அண்ணாமலை - எல்.முருகன் விளக்கம்!